36வது பிறந்தநாள் கொண்டாடும் விராட் கோஹ்லி: அவரின் சொத்து மதிப்பு
5 கார்த்திகை 2024 செவ்வாய் 08:50 | பார்வைகள் : 547
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (49) முறியடித்தவர் விராட் கோஹ்லி.
அதேபோல் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வடிவ போட்டிகளிலும் கோஹ்லி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்டுக்கு 7 கோடி ஊதியம் பெறும் விராட் கோஹ்லி, விளம்பர படங்களிலும் வருமானம் ஈட்டுகிறார்.
இதன்மூலம் தற்போது உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விராட் கோஹ்லி உள்ளார்.
உலகளவில் பிரபலமான விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு சுமார் 1,050 கோடி ஆகும்.
இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடும் கோஹ்லி, ஒரு டெஸ்டுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20க்கு ரூ.3 லட்சமும் பெறுகிறார். எனினும், 2024 டி20 உலகக்கிண்ண வெற்றிக்கு பின்னர் கோஹ்லி ஓய்வு அறிவித்தார்.
தனது Brands மூலம் அதிகளவில் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோஹ்லியின் வீட்டின் மொத்த மதிப்பு ரூ.34 கோடி ஆகும்.
இது தவிர, NCR பகுதியின் குருகிராமில் அவருக்கு ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
கார் சேகரிப்பில் ஆர்வமுள்ள கோஹ்லி பல ஆடம்பர கார்கள் வைத்துள்ளார். அவற்றில் 70 முதல் 80 லட்சம் மதிப்புள்ள Audi Q7 ஒன்று. Audi RS5 காரின் மதிப்பு ரூ.1.1 கோடி ஆகும்.
Audi R8 LMX காரின் மதிப்பு ரூ.2.9 கோடி ஆகும். மற்றும் Land Rover Vogue காரின் மதிப்பு ரூ.2.26 ஆகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.