மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன..??!! (நேற்றைய தொடர்ச்சி)
28 ஆவணி 2019 புதன் 11:30 | பார்வைகள் : 18297
இராணுவ வீரர்கள் அனைவரும் கடும் பச்சை நிறத்தில் சீருடை அணிந்ததும் இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்தது.
பின்னர், இதே பிரெஞ்சு தேசம் 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் புதிய திறனை வெளிப்படுத்தியது. camouflage என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'உருவ மறைப்பு' செய்ய ஆரம்பித்தார்கள்.
அதாவது சீருடை இயற்கை செடிகளை போல் கொடிகளை போல், பாசி படிந்த கற்கள் போல் இருக்கும். சீருடையில் சின்ன சின்ன துண்டு துணிகள் வைத்து தைத்து, இயற்கையோடு ஒன்றியது.
முன்னர் எப்போதும் இதை கேள்விப்படாத ஜெர்மனிய துருப்புகளின் கண்களுக்கு முன்னார் பிரெஞ்சு வீரர்கள் நின்றால் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்களின் சீருடை அம்சமாக இருந்தது.
இதனால் பிரெஞ்சு இராணுவத்தின் கை ஓங்கியிருந்தது என்றுகூட சொல்லலாம்.
இதே சீருடையில் காட்டுக்குள் தான் இறங்கலாம் என்பது கொசுறு தகவல். வெளியில் நடமாடினால் <<மாறுவேட போட்டிக்கு வந்த மாணவன்>> கதை ஆகிவிடும்.
சொல்ல மறந்துவிட்டோம்... இதே 'ஐடியாவோடு' தான் ஆயுதங்களும் கடும் பச்சை நிறங்களுக்கு மாறியது. அதற்கு முன்னர் எல்லாம் ஆயுதங்கள் பல வர்ணங்களில் கிடைத்திருந்தன என்பது மிக சோகமான தகவல்.
(தாமதமாக கனடா இதனையும் மாற்றி, மேலும் நவீனமாக CADPAT என அழைக்கப்படும் கணனியால் வடிவமைக்கப்பட்ட சீருடையை கொண்டுவந்தது. புகைப்படத்தை பார்க்கவும்)