அமெரிக்கா மீது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா...
5 கார்த்திகை 2024 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 1399
அமெரிக்காவில் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன் சில மணித்தியாலங்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கிழக்கு கடல் பகுதியை நோக்கி பல்வேறு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் சோதனை செய்ததாக ஜப்பான் மற்றும் தென் கொரியா அரசுகள் தெரிவித்துள்ளன.
அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் எனவும் வடகொரியா எச்சரித்து வருகிறது.