பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் சூர்யா ஒப்பந்தமா?
5 கார்த்திகை 2024 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 837
சூர்யா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’ரோலக்ஸ்’ என்ற ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் சூர்யா இந்த தகவலை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் விறுவிறுப்பாக இருக்கும் சூர்யா, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ’ரோலக்ஸ்’ படத்தை அவர் உறுதி செய்துள்ளார். விஜய் நடித்து வரும் 'தளபதி 69’ படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம், தன்னுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்ததாகவும், விரைவில் ஒரு மிகப்பெரிய படம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனேகமாக இந்த படம், சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ’ரோலக்ஸ்’ படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி பத்து நிமிடங்களில் ’ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சூர்யா நடிப்பில் அசத்தினார் என்ற நிலையில், அந்த கேரக்டரை வைத்து ஒரு முழு படமாக எடுக்க ஐடியா இருப்பதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
அந்த வகையில், லோகேஷ் மற்றும் சூர்யா இருவருமே கேவிஎன் நிறுவனத்துடன் ’ரோலக்ஸ்’ படத்திற்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.