Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?  நீர் யானையின் கணிப்பு

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?  நீர் யானையின் கணிப்பு

5 கார்த்திகை 2024 செவ்வாய் 09:09 | பார்வைகள் : 6241


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை அறிவதற்காக உலகமே காத்திருக்கும் நிலையில், தாய்லாந்து நாட்டில் பிரபலமான நீர் யானை ஒன்று அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை கணித்துள்ளது.

தாய்லாந்து நாட்டிலுள்ள Khao Kheow உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் பிரபலமான குட்டி நீர் யானை, மூ டெங் (Moo Deng).

வைரல் நீர் யானையான மூ டெங் உதவியுடன், தாய்லாந்து நாட்டவர்கள் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை கணித்துள்ளார்கள்.

அதற்காக, ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் பெயர் கொண்ட இரண்டு பழ கேக்குகள் மூ டெங் வாழும் கூண்டுக்குள் வைக்கப்பட்டன.

அவற்றில் மூ டெங் எந்த கேக்கை தேர்ந்தெடுக்கிறதோ, அதில் இருக்கும் பெயர் கொண்ட நபரே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது தாய்லாந்து மக்களின் நம்பிக்கை.

மக்கள் மூ டெங்கை அழைக்க, மூ டெங் நேராக வந்து ட்ரம்ப் பெயர் கொண்ட கேக்கை சாப்பிட, அதன் தாயோ, கமலா ஹரிஸ் பெயர் கொண்ட கேக்கை சாப்பிட்டது. இந்தக் காட்சியைக் கண்டு மக்கள் உற்சாகக் குரல் எழுப்பும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என மூ டெங் கணித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்