Paristamil Navigation Paristamil advert login

தனுஷின் 'இட்லி கடை' படம் எப்படி இருக்கு?

தனுஷின் 'இட்லி கடை' படம் எப்படி இருக்கு?

5 கார்த்திகை 2024 செவ்வாய் 09:04 | பார்வைகள் : 3494


தனுஷ் நடித்த 'இட்லி கடை’ படத்தின் 40 நிமிட காட்சிகளை தான் பார்த்ததாகவும், மிகவும் சூப்பராக இருப்பதாகவும் பிரபலம் ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்து இயக்கி வரும் ’இட்லி கடை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’இட்லி கடை’ படத்தின் 40 நிமிட காட்சிகளை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

’இட்லி கடை’ படம் ஒரு ரூரல் படம்; ’அசுரன்’ உள்பட சில படங்களில் அவருடன் நான் பணியாற்றி இருக்கிறேன், ஆனால் ’இட்லி கடை’ படத்தில் இவருடைய கேரக்டர் மிகவும் சூப்பராக இருக்கும். படம் 40 நிமிடங்கள் நான் பார்த்தேன்; எனக்கு தனுஷ் போட்டு காட்டினார். படத்தின் படப்பிடிப்பு முடிக்க உள்ள நிலையில், முடிவடையும் நிலையில் உள்ளது.

நிறைய படங்களில் எமோஷனல் இல்லாமல் இருக்கும் நிலையில், மிகவும் முக்கிய அம்சமான எமோஷனலை தனுஷ் அவர்கள் சரியாக புரிந்து கொண்டு, இந்த படத்தில் புகுத்தி உள்ளார். ’திருச்சிற்றம்பலம்’ படம் போலவே, இந்த படமும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் அளவுக்கு ஒரு படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரண் கெளசிக் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்