Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

5 கார்த்திகை 2024 செவ்வாய் 09:17 | பார்வைகள் : 3486


மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த 197 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதான குறித்த பெண், 5 கிலோகிராம் போதைப்பொருளுடன், BIA போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப் பையில் உணவுப் பொதிகளுடன் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளால் சோதனையின் போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று இரவு சுமார் 11:55 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ468 இல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபா என சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் சம்பவம் தொடர்பில் உதவி கோரியுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்