Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில்  பாரிய விஷ சிலந்திகளின் இனப்பெருக்கம்

பிரித்தானியாவில்  பாரிய விஷ சிலந்திகளின் இனப்பெருக்கம்

5 கார்த்திகை 2024 செவ்வாய் 10:20 | பார்வைகள் : 5430


பிரித்தானியாவின் Chester Zoo மூலம் பாரிய Fen Raft சிலந்திகள், இப்போது எண்ணிக்கையில் 10,000 பெண் சிலந்திகள் நாடு முழுவதும் இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

Fen Raft சிலந்திகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்தன.

இதன் வாழ்விடமான ஈர நிலப் பகுதிகள் அழிக்கப்பட்டதால், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

இதனை பாதுகாக்க Chester Zoo மற்றும் RSPB நிறுவனம் இணைந்து ஒரு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Chester Zoo நிறுவனம் தங்கள் bio-secure breeding facility-ல் நூற்றுக்கணக்கான பஞ்சு சிலந்திகளை ஒவ்வொரு நாளும் சிறு புழுக்களை உணவாகக் கொடுத்து வளர்த்து பிறகு அவற்றை இயற்கை சூழலுக்கு திரும்பக் கொண்டுவந்தது.

இந்த Fen Raft சிலந்திகள் தண்ணீரின் மேற்பரப்பில் சுதந்திரமாக நீந்தும் திறன் கொண்ட semi-aquatic சிலந்திகள் ஆகும்.

இவை வலை பின்னாமல், நேரடியாக வேட்டையாடும் சிலந்திகள். இதன் கால்கள் சிறு அதிர்வையும் உணரக்கூடிய மெல்லிய முடிகளால் சூழப்பட்டுள்ளது.

பிரித்தானியா முழுவதும் இது போன்ற இன்னும் சிலந்திகள் இனப்பெருக்கம் செய்துவருகின்றன.

இந்த சிலந்திகள் கடித்தால் மிகவும் வேதனையை ஏற்படுத்தக்கூடும் மற்றும் இது மிகவும் விஷம் கொண்டவை.

அவற்றின் விஷம் வலிமிகுந்த தீக்காயங்கள் மற்றும் காய்ச்சல் போன்ற வீக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை மனிதர்களைள் கொல்லாது என கண்டறியப்பட்டுள்ளது.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்