Paristamil Navigation Paristamil advert login

மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன..??!!

மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன..??!!

27 ஆவணி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18897


இராணுவ துறையில் பிரெஞ்சு தேசம் ஒரு முக்கிய மாற்றத்தினை கொண்டுவந்திருந்தது. அது பின்னர் உலகம் முழுவதுக்குமான தேவையாக மாறியது. 
 
1800 ஆண்டுகளின் நடுப்பகுதியில் இராணுவம் பல நாடுகளுக்கு தோற்றுவிக்கப்பட்டது. ரைஃபிள் வகை துப்பாக்கிகளும் அப்போதுதான் பிரபலமடையத்தொடங்கியிருந்தன. 
 
பிரெஞ்சு தேசம் இராணுவத்தை கட்டமைத்தது. பிரித்தானியா, ஜெர்மனி என இராணுவ கோதாவில் குதித்தது. ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பிரச்சனை இருந்தது. 
 
அது அவர்களின் சீருடை. 
 
பிரித்தானிய வீரர்கள் சிவப்பு + ஒரேஞ்ச் நிறங்களை கலந்து ஒரு சீருடை தயாரித்திருந்தார்கள். 
 
பிரெஞ்சு வீரர்களுக்கு வெள்ளை வெளேர் என ஒரு சீருடை.. 
 
ஜெர்மனியர்கள், அமெரிக்கர்கள் என எந்த இராணுவத்தினரும் அப்போது 'பளிச்' நிறத்திலான சீருடைகளே அணிவிக்கப்படன. 
 
முதன் முதலாக ,<<ஆஹா... இது தவறு.. கோட்டை விட்டுட்டோமே...!>> என சுதாகரித்துக்கொண்டது பிரெஞ்சு தேசம். 
 
காடுகளுக்குள் சண்டை பிடிக்கும் நாம் வெள்ளை சீருடை அணிந்திருந்தால் எதிரியின் ஆயுதங்களுக்கு குறிவைக்க இலகுவாக அல்லவா இருக்கும்...? என யோசித்தனர் பிரெஞ்சு இராணுவத்தினர். 
 
அதன் விளைவாக பிறந்தது தான் 'கடும்' நிறத்திலான சீருடைகள். 
 
எந்த வருடம் என சரியாக பதிவேட்டில் இல்லை. என்றபோதும் 'கடும் பச்சை' நிறத்தில் சீருடைகளை பிரெஞ்சு தேசம் அறிமுகப்படுத்தியது. 
 
இதுதான் சரியான வழி என மற்றைய நாடுகளும் சுதாகரித்து விழுத்துக்கொண்டன. 
 
அத்தோடு முடிந்ததா... இல்லை... camouflage என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் என புதிரான விஷயத்தையும் பிரெஞ்சு தேசம் அறிமுகப்படுத்தியது...
 
-நாளை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்