Paristamil Navigation Paristamil advert login

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: சலுகையை நீட்டித்தது தாய்லாந்து

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: சலுகையை நீட்டித்தது தாய்லாந்து

6 கார்த்திகை 2024 புதன் 03:02 | பார்வைகள் : 691


தாய்லாந்திற்கு இந்தியர்கள் 'விசா' இன்றி பயணிப்பதற்கான காலத்தை, அந்த நாட்டு அரசு, காலவரையறையின்றி நீட்டித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு, தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள விசா தேவையில்லை என்றும், அவ்வாறு வரும் நபர்கள், 30 நாட்கள் வரை விசா இன்றி தங்கள் நாட்டில் தங்கி இருக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்த நடைமுறை முதலில் கடந்த மே 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை குறிப்பிட்டிருந்தது. அதன்பின், நவம்பர் 11ம் தேதி வரை இந்த நடைமுறையை நீட்டித்தது. இதன் வாயிலாக தாய்லாந்திற்கு செல்லும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்நிலையில், விசா இன்றி தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு எவ்வித காலக்கெடுவும் இல்லை என தாய்லாந்து சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வரை தாய்லாந்திற்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 16.4 லட்சத்தை தொட்டுள்ளது. நடப்பாண்டில், இந்த எண்ணிக்கை, 20 லட்சத்தை எட்டும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்