யாரும் எதிர்பாராத வீரரை கேப்டனாக நியமித்த அவுஸ்திரேலியா
6 கார்த்திகை 2024 புதன் 09:04 | பார்வைகள் : 608
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு ஜோஷ் இங்லிஸ் அவுஸ்திரேலிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
மெல்போர்னில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி 8ஆம் திகதி நடக்கிறது.
இந்த நிலையில், 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடருக்கு ஜோஷ் இங்லிஸ் (Josh Inglis) அவுஸ்திரேலிய அணிக்கு தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கம்மின்ஸ் உட்பட சில வீரர்கள் ஆயத்தமாக என்பதற்காக, கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் விளையாட சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இங்லிஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 14ஆம் திகதி டி20 தொடர் தொடங்குகிறது.
ஜோஷ் இங்லிஸ் 26 டி20 போட்டிகளில் 679 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.