ஆலிவ் ஆயில் சரும பராமரிப்பு
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9716
அழகாக இளமையோடு இருக்க சிறந்த வழி ஆலிவ் ஆயில். இது உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்றும் கூட சொல்லலாம். இத்தகைய சிறப்பை உடைய ஆலிவ் ஆயிலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என அறிந்து கொள்ளுங்கள்.
1. உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
2. மேக்கப் கிரீமை விட, ஆலிவ் ஆயிலை வைத்து மேக்கப்பை நீக்கலாம். முக்கியமாக கண்களின் அருகே மேக்கப் கிரீமை வைத்து நீக்கும் போது கவனமாக செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து அடிக்கடி செய்வதால் அந்த இடம் நிறம் மாறி காணப்படும்.
இவையெல்லாம் ஏற்படாமல் இருக்க, காட்டனை ஆலிவ் எண்ணெயில் நனைத்து மஸ்காரா, காஜல் போன்றவற்றை நீக்கலாம். இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
3. தக்காளி தான் முதலில் வயதான தோற்றத்தை குறைக்கும் சிறந்த பொருளாக இருந்நது. ஏனென்றால் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயதான தோற்றத்தை குறைவாக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ற லைகோபைன் தக்காளியில் அதிகமாக உள்ளது. இந்த தக்காளியை முதலில் முகத்தில் தடவி பின் அதன் மேல் ஆலிவ் ஆயிலை பூசி மசாஜ் செய்து வந்தால், சருமமானது பொலிவோடு இருக்கும்.
4. ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும. மேலும் இதை உதடுகளில் தடவினால், உதட்டில் வெடிப்பு ஏற்படாமல், மென்மையாக, பிங்க் நிறத்தில் மாறும்.
5. குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.