NICE நகரின் செல்லப்பெயர் குறித்து தெரியுமா..??

14 ஆவணி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 21137
கடந்த பிரெஞ்சு புதினத்தில் நீஸ் நகரம் குறித்து சில 'சுருக்கமான' தகவல்களை பகிர்ந்திருந்தோம். இன்றைய பிரெஞ்சு புதினத்தில் நீஸ் நகருக்கு இருக்கும் செல்லப்பெயர் குறித்து பார்க்கலாம்...
பிரான்சின் தெற்கு பிராந்தியங்களிலும், இத்தாலியின் எல்லைகளிலும் ஒரு மொழி வழக்கத்தில் உண்டு. ரோமனில் இருந்து மருவிய இந்த மொழிக்கு Occitan என பெயர். இந்த மொழியினை 'காதல்' மொழி என குறிப்பிடுவது உண்டு.
இது அப்படியே இருக்க...,
நீஸ் நகருக்கு <<Nice la Belle>> எனும் ஒரு செல்லப்பெயர் உள்ளது. Belle என்றால் மேற்குறிப்பிட்ட Occitan மொழியில் 'அழகானது' என அர்த்தம். <<Nice la Belle>> என்றால் நீஸ் மிக அழகான நகரம் என்று பொருள்.

இந்த பெயரினை முதன் முதலாக பிரெஞ்சு கவிஞர் Menica Rondelly தனது பாடல் ஒன்றில் பயன்படுத்தினார். 1912 ஆம் ஆண்டு இந்த பாடல் இயற்றப்பட்டது.
அன்றில் இருந்து இந்த பாடல் நீஸ் நகரத்தின் 'அறிவிக்கப்படாத கீதம்' ஆக உள்ளது.
அதன் பிற்பாடு நீஸ் நகரினை Nice la Belle என குறிப்பிடுவதும், தலைப்பிடுவதும் தொடர்ந்து வருகின்றது.
தவிர, நீஸ் நகரத்துக்கும் (ஏன்... மார்செக்கு கூட...) இத்தாலிக்கும் ஒரே மாதிரியான கலாச்சார பழக்கவழக்கங்களையும் நீங்கள் அவதானிக்கலாம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025