பாகிஸ்தான் கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை
6 கார்த்திகை 2024 புதன் 11:48 | பார்வைகள் : 1334
போர்க் கப்பலில் இருந்து 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படை தகவலின்படி, சோதிக்கப்பட்ட 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை, நிலம் மற்றும் கடல் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
திசை மற்றும் வேகத்தை மாற்றும் அம்சங்களைக் கொண்ட மேம்பட்ட வழிகாட்டி அமைப்புடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கடற்படை தலைமைத் தளபதி நவீத் அஷ்ரஃப் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளா்களின் முன்னிலையில் ஏவுகணை சோதனை செயல் விளக்கம் நடைபெற்றது.
ஏவுகணை சோதனை வெற்றிக்காக கடற்படை மற்றும் விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஆசிஃப் அலி சதாரி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.