Paristamil Navigation Paristamil advert login

குடும்ப வன்முறை 10% சதவீதத்தால் அதிகரிப்பு..! - பட்டியலில் Seine-Saint-Denis மாவட்டம்..

குடும்ப வன்முறை 10% சதவீதத்தால் அதிகரிப்பு..! - பட்டியலில் Seine-Saint-Denis மாவட்டம்..

6 கார்த்திகை 2024 புதன் 13:25 | பார்வைகள் : 2066


பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை 10% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் அதிகளவான வன்முறைகள் பதிவாகியுள்ளன.

2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 271,000 பேர் அவர்களது முன்னாள்  துணையினால் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% சதவீதத்தாலும், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 85% சதவீதமானவர்கள் பெண்கள் எனவும், France, Pas-de-Calais, Nord, Somme, Seine-Saint-Denis மற்றும் Alpes-Maritimes ஆகிய மாவட்டங்களில் அதிகளவான வன்முறைகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்