Paristamil Navigation Paristamil advert login

NICE - தென்கிழக்கு கோடியில் ஒரு பெருநகரம்..!!

NICE - தென்கிழக்கு கோடியில் ஒரு பெருநகரம்..!!

9 ஆவணி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18570


பிரான்சின் ஏழாவது பெரிய நகரம் நீஸ்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில் நீஸ் நகரம் குறித்த சில தகவல்களை பார்க்கலாம். 
ஒரு 'பிரெஞ்சு நகரம்' என சாதாரணமாக இருந்த இந்த நகரம், ஜூலை 14 தேசியநாள் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், உலகம் முழுவதும் அறியப்பட்ட நகரமாக மாறியது. 
 
721 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்த நகரம்,  Alpes-Maritimes மாவட்டத்தின் தலைநகரமாகும். பிரான்சில் உள்ள ஏழாவது மிகப்பெரிய நகரமாகும். 
 
மொத்த மக்கள் தொகை ஒரு மில்லியனை கடந்துள்ளது. 
 
Provence-Alpes-Côte d'Azur மாகாணத்தில் உள்ள இரண்டாவது பெரும் நகரம். பட்டியலில் மார்செ நகருக்கு அடுத்து உள்ளது.
 
நீஸ் நகரில் இருந்து 13 கிலோமீற்றர்கள் பயணித்தால் இத்தாலியின் எல்லையை அடைந்துவிடலாம். 
 
நீஸ் நகரம் எல்லை பிராந்தியமாக உள்ளதால், பிரான்சின் பிற மாவட்டங்களை விடவும் இங்கு சில வேறுவித கலாச்சார, உணவுப் பழக்கவழக்கங்கள்  உள்ளன. 
 
நீஸ் துறைமுகத்துக்கு வந்து செல்லும் கப்பல்களுடாக பல புதிய கலாச்சாரங்ககும் வந்தடைந்ததாக வரலாறுகள் உண்டு.
 
நீஸ் நகருக்கென்று ஒரு பிரத்யே உணவு உள்ளது. Pissaladière என அழைக்கப்படும் இந்த உணவு உலர் கொண்டல்கடலை மூலம் தயாரிக்கப்படுகின்றது. 
 
இந்த நீஸ் நகருக்கு ஒரு செல்லப்பெயர் இருப்பது உங்களுக்கு தெரியுமா??!! நாளை அது குறித்து பார்க்கலாம்...

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்