Paristamil Navigation Paristamil advert login

இராணுவத் தளமாக மாறிய Hôtel Lutetia விடுதி!

இராணுவத் தளமாக மாறிய Hôtel Lutetia விடுதி!

8 ஆவணி 2019 வியாழன் 11:30 | பார்வைகள் : 18478


நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் Hôtel Lutetia விடுதி குறித்த சில தகவல்களும், அது பிரபலமாவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு எனவும் தெரிவித்திருந்தோம். அதன் முதல் காரணம் நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்... இரண்டாவது காரணம் இன்று....
 
இரண்டாம் உலகப்போரில் Hôtel Lutetia விடுதி மிக பிரதானமான இடத்தை கொண்டிருந்தது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் உலகப்போர் ஆரம்பித்ததும், ஏராளமான அகதிகள் பரிசை நோக்கி படையெடுத்தனர்.  ஜெர்மன் வீரர்கள் பரிசில் உள்ள பல இடங்களை ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தனர்....
 
அப்போது Lutetia விடுதி பிரபலமாக இருந்ததால், அங்கு பல கலைஞர்கள், ஓவியர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டனர். ஆனால் துரதிஷ்ட்டமாக, 1940 ஜூன் மாத நடுப்பகுதியில் ஜெர்மன் வீரர்கள் பரிசை முற்றாக ஆக்கிரமிக்க, Hôtel Lutetia இல் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியேறி, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
 
பரிசுக்குள் வந்த ஜெர்மனியின் நாசிப்படையினர், நேரே Hôtel Lutetia விடுதிக்குச் சென்று தங்கியிருந்தார்கள். 
 
தவிர, இந்த விடுதி அவர்களுக்கு ஒரு நீதிமன்றம் போலவே ஆனது. கைதிகளை அடைத்து வைக்கவும், விசாரணைகளை மேற்கொள்ளவும், ஆயுதங்களை வைத்துக்கொள்ளவும், உணவுகளை சேமித்து வைத்து வீரர்களுக்கு கொண்டு செல்லவும் என... ஒரு இராணுவ முகாமாகவே மாற்றியிருந்தார்கள்.
 
பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்து, பரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டதை அடுத்து, Hôtel Lutetia வும் கைவிடவிடப்பட்டது. 
 
பின்னர் இந்த விடுதியை அரசு துடைத்து தூசு தட்டி பராமரிக்கத் தொடங்கியது. கட்டிட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. 'லூவர்' அருங்காட்சியகத்தினர் இந்த விடுதியையும் சில வருடங்கள் பராமரித்தனர். 
 
2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் விடுதியில் இருந்த அனைத்து பொருட்களையும் ஏலத்தில் விட்டு, கட்டிடத்தை மீள்-நிர்மானம் செய்து.. 2018 ஆம் ஆண்டு ஜூலையில் மீண்டும் புதிதாக திறந்தார்கள். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்