கூகுளில் 25 சதவீத Codeகளை மனிதர் எழுதுவதில்லை: சுந்தர் பிச்சை
7 கார்த்திகை 2024 வியாழன் 09:39 | பார்வைகள் : 673
செயற்கை நுண்ணறிவு கூகுளில் உள்ள Programm Codeகளில் 25 சதவீதத்தை எழுதுவதாக CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
Artificial Intelligence தொழில்நுட்பமானது தற்போதைய சூழலில் பல துறைகளில் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு பறிபோகுமா என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில், Google நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
அதில், தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை பகிர்ந்த தகவல் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் Code Writers-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, கூகுளின் மென்பொருள் சார்ந்த Program Codeகளில் 25 சதவீதமானது, செயற்கை நுண்ணறிவு (AI) எழுதி வருவதாகவும், அதனை பிழை திருத்துவது மற்றும் சரிபார்ப்பது ஆகிய பணிகளைதான் பொறியாளர்கள் செய்வதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
எனினும், தற்போதைக்கு சில அடிப்படையான பணிகளுக்கு மட்டுமே AI தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த பணிகள் கூகுள் வழக்கமாக மேற்கொள்வதாகும்.
எனவே, பொறியாளர்கள் வேறு பணிகளில் கவனம் செலுத்தலாம் என கூகுள் நினைப்பதாக கூறப்படும் நிலையில், இது மென்பொருள் வடிவமைப்பு சார்ந்த பணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
இதுகுறித்து Tech வல்லுநர்கள் கூறுகையில், "பொறியாளர்கள் தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ள AI Assistant செய்யும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.