Paristamil Navigation Paristamil advert login

Paris Lutetia - உலக பிரபலங்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு விடுதி.

Paris Lutetia - உலக பிரபலங்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு விடுதி.

7 ஆவணி 2019 புதன் 11:30 | பார்வைகள் : 18314


பரிஸ் ஆறாம் வட்டாரத்தின்  Saint-Germain-des-Prés  இல் உள்ள Hôtel Lutetia கட்டிடம் அடிக்கடி உங்கள் கண்களில் தென்படுகின்றதா?? அது குறித்த சில ரகசிய தகவல்களை இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
இந்த விடுதி 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நூற்றாண்டை கொண்டாடி பத்து வருடம் ஆகிவிட்டது. 
 
Louis-Charles Boileau மற்றும் Henri Tauzin ஆகிய இருவரும் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார்கள். 
 
இந்த விடுதி பின்னர் பல காரணங்களுக்காக பிரபல்யம் ஆனது. அதில் ஒன்று, இங்கு தங்கியிருந்த பிரபலங்கள்...
 
ஓவியர் பாப்லோ பிக்காசோ இங்கு நீண்ட காலமாக தங்கியிருந்தார். பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி சாள்-து-கோல் பல மாதங்களாக தங்கியிருந்தார். 
 
புகழ்பெற்ற பிரெஞ்சு நடிகை, பாடகி Marianne Oswald  இங்கு நீண்ட காலம் தங்கியிருந்தார். 
 
நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு இலக்கியவாதி André Gide இற்கு மிக பிடித்தமான இடம் இந்த விடுதி தான். இவரின் பல எழுத்துக்களின் உருவாக்கம் இங்கு தான் பிறந்தது. 
 
அமெரிக்கச் செல்வந்தர், அரிய பொருட்கள் சேகரிப்பாளரான Peggy Guggenheim கூட பிரான்சுக்கு வரும்போது இங்குதான் தங்குவார். 
 
உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்யப்பட்டு சக்கை போடுபோட்ட  <<Ulysses>> நாவலை எழுதிய James Joyce  இங்கு தங்கியிருந்தார். இந்த நாவலின் ஒரு பகுதி இங்கு வைத்துத்தான் எழுதப்பட்டது என்பது கொசுறு தகவல்...!
 
அமெரிக்க எழுத்தாளரான Dawn Powell கூட இங்கு மூன்று மாதம் தங்கியிருந்தார். 
 
இப்படி பிரபலங்கள் புடை சூழ வந்து சேருவதால் இந்த விடுதி பெரும் பிரலமாக உள்ளது. 
 
ஆனால் இது மட்டும் காரணம் இல்லை. இரண்டு காரணங்கள் உண்டு என சொன்னோம் இல்லையா..?? அது நாளை..

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்