Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் 16 ஆம் வட்டாரத்துக்கு ஏன் இரண்டு தபால் குறியீட்டு இலக்கம்??!!

பரிஸ் 16 ஆம் வட்டாரத்துக்கு ஏன் இரண்டு தபால் குறியீட்டு இலக்கம்??!!

6 ஆவணி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18106


பரிஸ் 16 ஆம் வட்டாரத்துக்கு இரண்டு தபால் குறியீட்டு இலக்கம் இருப்பதை நீங்கள் என்றாவது அவதானித்ததுண்டா??
 
பரிஸ் பிரான்சின் '75' ஆவது மாவட்டம் என்பதால் இங்குள்ள வட்டாரங்களின் தபால் இலக்க குறியீடு 75 இல் ஆரம்பிக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததுதான். 
 
ஆகவே, 16 ஆம் வட்டாரத்த்தின் தபால் குறியீட்டு இலக்கம் '75'016 ஆக உள்ளது. ஆனால் 75116 எனும் இலக்கமும் ஏன் பயன்பாட்டில் உள்ளது??
 
அப்போது பரிஸ் 16 ஆம் வட்டாரம் பெரும் வளர்ச்சி பெற்று, அதிக மக்கள் தொகையையும் கொண்டு, பெரும் நிறுவனங்களையும் கொண்டதாக இருந்தது. 
 
குறித்த வட்டாரத்துக்கு வரும் கடிதங்களையும் பொதிகளையும் ஒரே நாளில் இங்கு அமைக்கப்பட்ட ஒரு தபால் நிலையத்தினால் கொண்டு சேர்க்கமுடியவில்லை. அதற்குள் மறுநாள் வந்துவிட, பொதிகள் தேங்கிவிட ஆரம்பித்தன. 
 
இதனால் பெரும் சிக்கல்கள் எழ.. இதை இரண்டாக பிரிப்பதே சரியாக இருக்கும் எனும் திட்டம் முன்மொழியப்பட்டது. 
 
1972 ஆம் ஆண்டு முதன்முறையாக 16 ஆம் வட்டாரத்துக்கு இரட்டை 'போஸ்ட்டல் கோட்' எனும் தபால் குறியீட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
பதினாறாம் வட்டாரத்தை இரண்டாக பிரித்த கதை இது தான். 75016 மற்றும் 75116 ஆகிய இரண்டு இலக்கங்களும் 16 வட்டாரத்துக்குரியவை தான். 
 
இன்று நவீன வசதிகளுடன் தபால்நிலையம் மாறிவிட்டபோதும், இரண்டில் ஒரு குறியீட்டு இலக்கமே போதுமானதாக இருந்தபோதும்... தற்போதுவரை இரண்டையுமே பயன்படுத்துகின்றார்கள்...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்