சூர்யாவுடன் மோத தயாரான தனுஷ்!
8 கார்த்திகை 2024 வெள்ளி 06:54 | பார்வைகள் : 5378
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்கு பின் ராயன் படத்தின் மூலம் இயக்குனராக கம்பேக் கொடுத்தார். அப்படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தது மட்டுமின்றி ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். அப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடிக்க அவருடன் அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய இளம் நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்தை தனுஷே தன்னுடைய ஒண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இட்லி கடை என்கிற படத்தை தற்போது இயக்கி வரும் தனுஷ், அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
அதன்படி இட்லி கடை திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ந் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் சிவனேசன் என்கிற கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக ஏப்ரல் 10-ந் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 44 படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுவதால் அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் செம்ம மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan