உலகின் அதிக வெப்ப நிலை - அறிவியலாளர்கள் எச்சரிக்கை

8 கார்த்திகை 2024 வெள்ளி 08:50 | பார்வைகள் : 5695
2024ம் ஆண்டு இதுவரையிலான பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) 2024 ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான ஆண்டாக மாறும் பாதையில் உள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது.
உலகத் தலைவர்கள் அஜர்பைஜானில் நடைபெறும் COP29 காலநிலை மாநாட்டில் கூடுவதற்கு முன்பாகவே இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
கடுமையான வெப்ப அலை பூமியின் வெப்பநிலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான சராசரி வெப்பநிலை முந்தைய சாதனைகளை விட அதிகமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், மீதமுள்ள மாதங்களில் வெப்பநிலை குறையாவிட்டால், 2024 ஆண்டு பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான ஆண்டாக மாறுவது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
C3S இயக்குனர் கார்லோ பியோன்டெம்போ (Carlo Buontempo) இந்த அதிர்ச்சியூட்டும் போக்கை நேரடியாக காலநிலை மாற்றத்துடன் இணைத்து, கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் முழுவதும் வெப்பமடைவதை வலியுறுத்தியுள்ளார்.
அறிவியலாளர்கள், 2024 ஆண்டு பூமியின் வெப்பநிலை முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவைத் தாண்டிய முதல் ஆண்டாகவும் இருக்கும் என்று எச்சரிக்கிறது.
உலகம் 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், உடனடி மற்றும் தீவிரமான காலநிலை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1