பிரான்ஸ் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்பாப்பே...!
8 கார்த்திகை 2024 வெள்ளி 09:07 | பார்வைகள் : 128
கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe), வரும் யூஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்கான பிரான்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
எம்பாப்பேவை அணியில் இருந்து நீக்கும் முடிவை தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் (Didier Deschamps) எடுத்துள்ளார்.
எம்பாப்பேவிற்கு ஏற்பட்ட சிறிய காரம் காரணமாக கடந்த மாத போட்டிகளுக்கு அவர் தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பின்னர் அவர் Real Madrid அணிக்காக விளையாடுவதைக் கண்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எம்பாப்பே அணியில் இடம்பெறாததற்கு காரணம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், இக்காரணத்தை டெஷாம்ப்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
25 வயதான எம்பாப்பே சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்து வந்தார், பின்னர் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாட வந்தார்.
இருந்தாலும் பிரான்ஸ் அணியில் எம்பாப்பே இல்லாமை அணிக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மற்ற முன்னணி வீரர்களான எங்-கோலோ கான்டே மற்றும் ஆதிரியன் ராபியோ அணியில் திரும்பியுள்ளனர்.
இம்முறை பிரான்ஸ் அணியில், லில்லி அணியின் லுகாஸ் செவாலியர் முதல்முறையாக கோல்கீப்பராக அழைக்கப்பட்டு உள்ளார், மேலும் இதனால் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் ஆல்பான்சே ஆரியோலா அணியில் இல்லை.
Goalkeepers: லுகாஸ் செவாலியர் (லில்லி), மைக் மெய்னான் (ஏ.சி. மிலான்), பிரைஸ் சாம்பா (லென்ஸ்)
Defenders: ஜோனதன் கிளாஸ், லூகஸ் டிஞே, வெஸ்லி ஃபோபானா, தெயோ ஹெர்னான்டஸ், இப்ராகிம் கொனதே, ஜூல்ஸ் குண்டே, வில்லியம் சலிபா, டயோட் உபமேகானோ
Midfielders: எடுவார்டோ காமவிங்கா, மெட்டியோ குவென்டோஸி, என்’கோலோ கான்டே, மனு கோனே, ஆதிரியன் ராபியோ, வாறன் சையர்-எமெரி
Forwards: பிராட்லி பார்கோலா, ஒச்மேன் டெம்பெலே, ரண்டல் கோலோ மூயானி, கிறிஸ்டோபர் என்குங்கு, மைக்கேல் ஒலிச், மார்கஸ் துராம்