ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் உக்ரேனுக்கு ஆதரவளித்த மக்ரோன்!
8 கார்த்திகை 2024 வெள்ளி 09:08 | பார்வைகள் : 567
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதன் பின்னர், உக்ரேனுக்கு வழங்கும் தனது ஆதரவை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று உக்ரேன் ஜனாதிபதியுடன் உரையாடிய மக்ரோன், உக்ரேனுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நேற்று நவம்பர் 7 ஆம் திகதி வியாழக்கிழமை ’ஐரோப்பிய அரசியல் அமைப்பினருக்கான (Communauté politique européenne - CPE) மாநாடு ஹங்கேரி தலைநகர் Budapest இல் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்து உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கியைச் சந்தித்தார்.
அதன்போது, உக்ரேனுக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன், உக்ரேன் குறித்து ஐரோப்பா தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்றவர்கள் எழுதியவற்றை வரலாறாக்காமல், உக்ரேனின் வரலாற்றை ஐரோப்பா எழுத வேண்டும் என தீர்க்கமாக தெரிவித்தார்.