Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் - லியோன் நகரங்களுக்கிடையிலான TGV சேவைகள் தடைப்படுகிறது!!

பரிஸ் - லியோன் நகரங்களுக்கிடையிலான TGV சேவைகள் தடைப்படுகிறது!!

8 கார்த்திகை 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 5219


பரிஸ் - லியோன் நகரங்களுக்கிடையிலான நெடுந்தூர தொடருந்து சேவை (TGV) மூன்று நாட்கள் தடைப்பட உள்ளன.

நவம்பர் 8 ஆம் திகதி இரவு 11 மணி முதல், 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை 101 மணிநேரங்கள் இந்த சேவைத்தடை ஏற்பட உள்ளது. தொடருந்துகளுக்கான சமிக்ஞ்சை விளக்குகளை மேம்படுத்தும் பணிகள் இடம்பெற உள்ளதாக SNCF அறிவித்துள்ளது.

குறித்த நாட்களில் பரிசில் இருந்து Occitanie (Montpellier) நோக்கிச் செல்லும் அனைத்து சேவைகளும், 

பரிசில் இருந்து Provence Alpes-Côte d'Azur (Marseille, Toulon போன்ற நகரங்களுக்கான) சேவைகளும்,

பரிசில் இருந்து Auvergne-Rhône-Alpes (Annecy, Chambéry, Grenoble போன்ற நகரங்களுக்கான) சேவைகளும், 

பரிசில் இருந்து Burgundy Franche-Comté (Dijon நகருக்கு) சேவையும், 

பரிசில் இருந்து Grand Est (Strasbourg, Metz போன்ற நகரங்களுக்கான) சேவைகளும்  தடைப்பட உள்ளன.

சில சேவைகள் மிக தாமதாக இயக்கப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்