அபாயா அணிந்து வந்த மாணவி.. ஆசிரியர் மீது தாக்குதல்!
8 கார்த்திகை 2024 வெள்ளி 12:00 | பார்வைகள் : 3037
பாடசாலைக்கு அபாயா (இஸ்லாமிய கலாச்சார உடை) அணிந்து வந்த மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளார்.
Montreuil (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள lycée Jean-Jaurès உயர்கல்வி பாடசாலையில், நவம்பர் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவி ஒருவர் அபாயா அணிந்து வருகை தந்துள்ளார். அவரது அபாயா ஆடையை அகற்றும்படி பெண் ஆசிரியர் ஒருவர் பணித்துள்ளார். இச்சம்பவம் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
ஆசிரிய ஆலோசக அமைப்பு (Conseiller Principal d'Éducation) அபாயா அணிய அனுமதித்ததாக குறித்த மாணவி தெரிவிக்க, அதனை ஆசிரியர் மறுத்துள்ளர். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பாடசாலைகளில் அபாயா அணிய தடை விதிக்கப்பட்டதாக ஆசிரியர் மாணவிக்கு தெரிவித்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி ஆசிரியரை நோக்கி எச்சில் துப்பியதுடன், அவரை கன்னத்தில் அறைந்தும் உள்ளார்.
அதை அடுத்து அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவி மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.