Paristamil Navigation Paristamil advert login

Philharmonie de Paris : சில தகவல்கள்..!!

Philharmonie de Paris : சில தகவல்கள்..!!

15 ஆடி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18692


பரிசில் உள்ள Philharmonie de Paris குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
 
பரிசின் மூன்றாவது பெரிய பூங்காவான Parc de la Villette பூங்காவின் ஒரு பகுதியாக இந்த Philharmonie de Paris உள்ளது.
 
 பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் avenue Jean-Jaurès இல் உள்ள இந்த கட்டிடத்தை வெறுமனே ஒரு அருங்காட்சியகம் என ஒதுக்கிவிட முடியாது. பல பகுதிகள் கொண்ட இந்த கட்டிடத்தை ஒரு 'கலாச்சார நிறுவனம்' என அறிமுகப்படுத்தலாம்..
 
இங்குள்ள வானியல் கண்காட்சி கூடத்தோடு, இசை அரங்கம் ஒன்றும் மிக பிரபலம். இசைக்கு தனியாகவும், சிறப்பாகவும் இங்கு பல வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இசை நிகழ்ச்சி செய்யும் அரங்கு, இசை பயிற்சி அறை என தனித்தனியே அரங்குகள் உள்ளன. இசை அரங்கு மொத்தமாக 2,400 இருக்கைகள் கொண்டது. 
 
இந்த இசை அரங்கு, 2015, ஜனவரி 14 ஆம் திகதி Orchestre de Paris இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியோடு திறப்புவிழா செய்யப்பட்டது. அன்றைய நாளில் சார்லி-எப்தோ பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. (இதன் திறப்புவிழாவுக்கு ஒரு வாரத்தின் முன்னர் இந்த சார்லி-எப்தோ தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது) 
 
தவிர, கல்விக்கூடம் ஒன்றும், உணவகம், மது விடுதி ஒன்றும் இங்கு உள்ளது. 
 
காலையில் இருந்து மாலை வரை நேரம் செலவிட போதுமான அத்தனை விடயங்களும் இங்கு உள்ளன. இக்கோடை காலத்தில் ஒரு நாள் பொழுதை நீங்கள் இங்கு ஆக்கபூர்வமாக செலவிடலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்