Paristamil Navigation Paristamil advert login

163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் வீரர்!

163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் வீரர்!

8 கார்த்திகை 2024 வெள்ளி 09:11 | பார்வைகள் : 501


பாகிஸ்தான்  அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 163 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறிய அவுஸ்திரேலிய அணி  35 ஓவர்கள் முடிவிலேயே 163 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ஓட்டங்கள் குவித்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹரிஸ் ரவூப் 5 விக்கெட்டுகளை பறித்து மிரட்டினார்.

மற்றொரு புறம் அவுஸ்திரேலிய வீரர்களை திணறடித்த ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நசீம் ஷா மற்றும் ஹஸ்னைன் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி இதுவரை 2.1 ஓவர்கள் முடிவில் 11 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.


பாகிஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 153 ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்