Paristamil Navigation Paristamil advert login

ஐந்து ஆண்டுகளின் பின்னர் - நோர்து-டேம் தேவாலயத்தில் ஒலித்த காண்டாமணிகள்..!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் - நோர்து-டேம் தேவாலயத்தில் ஒலித்த காண்டாமணிகள்..!

8 கார்த்திகை 2024 வெள்ளி 13:41 | பார்வைகள் : 427


நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள காண்டாமணிகள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று நவம்பர் 8, வெள்ளிக்கிழமை ஒலிக்கவிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான தேவாலயம் திருத்தப்பணிகளின் பின்னர், அடுத்த மாதம் 7 ஆம் திகதி (டிசம்பர், 2024) திறக்கப்பட உள்ளது. அதற்காக ஆயத்தப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக இன்று வெள்ளோட்ட முயற்சியாக வடக்கு மணிக்கூண்டுப் பக்கம் உள்ள எட்டு காண்டாமணிகள் காலை 10.30 மணி முதல் ஒன்றின் பின் ஒன்றாக ஒலிக்கவிடப்பட்டது.

இந்த காண்டாமணிகள் இயந்திரங்கள் மூலம் மின்சாரத்தில் இயக்கப்பட்டன.

குறித்த நோர்து-டேம் தேவாலயத்தில் Gabriel எனும் நான்கு தொன் எடையுள்ள இராட்சத காண்டாமணியும், 800 கிலோ எடையுள்ள சிறிய காண்டாமணியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்