Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 7)
11 ஆடி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18225
Faïd காணாமல் போனதோடு, அவன் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பரபரப்பும் அடங்கிப்போனது.
காவல்துறையினர் அவனை தனிப்படை அமைத்து தேடிவந்தபோதும், ஊடகங்களில் அவன் பெயர் கிட்டத்தட்ட அங்கியே போனது.
மூன்று வாரங்கள் ஓடிப்போக, ஜூலை 24, 2018 ஆம் ஆண்டு Faïd ஒரு கண்காணிப்பு கமராவில் சிக்கியிருந்தான். மகிழுந்து ஒன்றுக்குள் இரண்டு நபர்களுடன் மூன்றாவது நபராக Faïd இருந்தான்.
அவனது மகிழுந்து அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், வணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் அந்த மகிழுந்து கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே ப்ளாஸ்டிக் வெடிபொருட்கள் உள்ளே இருந்து மீட்கப்பட்டன.
குற்றவாளி, Sarcelles நகர் நோக்கி தப்பிச் சென்றிருந்தான்.
இஸ்லாமியர்களின் கலாச்சார உடையை இவன் கவச உடையாக அணிந்து, தன்னைத்தானே தலைமறைவாக்கிக்கொண்டு பொது இடங்களில் உலாவ ஆரம்பித்திருந்தான்.
ஒவ்வொரு இடங்களில் இருந்து மாயமாகி, மாயமாகி கண்கணில் மண்ணை தூவிவிட்டு ஓடி மறைந்தான் Faïd.
அமெரிக்க 'ஆக்ஷன்' திரைப்படங்களின் பிரதிபலிப்பில் இவன் கொள்ளைகளில் ஈடுபட தொடங்கியிருந்தான் என முன்னர் தெரிவித்திருந்தோம் இல்லையா..??
Scarface, Reservoir Dogs மற்றும் Heat போன்ற திரைப்படங்களில் வரும் கதாநாயகனையோ, வில்லனையோ தன்னைப்போல் எண்ணிக்கொண்டன்.
தவிர, பிரான்சின் பிரபல கொள்ளைக்காரனான Jacques Mesrine தன்னுடைய 'ஹீரோ' என Faïd ஒருதடவை தெரிவித்திருந்தான்.
சிறையில் இருந்து தப்பித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்த ஒரு நாளில் மாயாவி சிக்கினான்.
(தொடரும்..)