பால் குடித்தால் உடல் எடை அதிகமாகுமா?
9 கார்த்திகை 2024 சனி 07:36 | பார்வைகள் : 1027
பால் ஒரு முழுமையான உணவு என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது. பாலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அவை அனைத்தும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பாலில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் கால்சியம் எலும்பு தொடர்பான பல பிரச்சினைகளை நீக்கி, எலும்பாக எலும்பை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, பால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், அவர்களது பற்களை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி பல நன்மைகள் பாலில் நிறைந்திருந்தாலும் பால் குறித்து பொதுவான கேள்வி எல்லோருக்கும் ஒன்று உண்டு. அதாவது பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? இந்தக் கேள்விக்கான பதிலை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக பாலில் பல வகைகள் உள்ளன ஆட்டுப்பால், பசு பால் அல்லது எருமை பால். ஆனால் தற்போது நம்மில் பெரும்பாலானோர் கடைகளில் பேக் செய்யப்பட்ட பாலை தான் வாங்கி குடிக்கிறோம். அவற்றிலும் புல் கிரீம் மில்க், டோன் மில்க், டபுள் டோன் மில்க் என பல வகைகள் உண்டு. அவை அனைத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் எதுவென்றால் அவற்றில் இருக்கும் கொழுப்பு தான்.
ஆம், பாக்கெட் பால் அனைத்திலும் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் ஒரே அளவாக தான் இருக்கும். ஆனால் கொழுப்பின் அளவு மட்டுமே வேறுபட்டு இப்பதை உங்களால் காண முடியும்.
நீங்கள் உடல் எடை அதிகரிக்க விரும்பினால் அதிக கொழுப்புள்ள பாலை குடிக்கலாம். அதுவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் குறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பது தான் நன்மை பயக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, பால் குடித்தால் உண்மையில் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் உடல் எடை ரொம்பவே கம்மியாக இருப்பவர்கள் அவர்கள் தங்களது உணவில் அதிக கலோரிகள் மற்றும் புரதம் சேர்க்க வேண்டும். எனவே அவர்கள் தங்களது உணவில் சத்தான உணவுகளுடன் கூட பாலையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களது உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க முடியும் கூடுதலாக உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் பொருந்தும். அதாவது ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி. ஆனால் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் தங்களது உணவில் அதிக கலோரிகளை சேர்க்கக்கூடாது. குறைந்த கலோரி உள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக குறைந்த கொழுப்புள்ள பால் மட்டுமே குடிக்க வேண்டும்.
இந்நாட்களில் பெரும்பாலானோர் பாக்கெட் பால் தான் குடிக்கிறார்கள். ஆனால் அந்தப் பாலில் கலப்படம் அதிகமாக உள்ளது தெரியுமா? ஏனெனில் பாக்கெட் பாலின் தேவை அதிகம் மற்றும் அதன் உற்பத்தியும் ரொம்பவே குறைவும். எனவே, இவற்றை நிறைவு செய்ய பசு மற்றும் எருமை மாடுகளுக்கு அதிகமாக பால் சுரக்க ஊசி போடப்படுகிறது. இப்படி செயற்கை முறையில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் அதில் ஏராளமான செயற்கை ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது. எனவே இப்படி கலப்படம் கலந்த பாலை குடிப்பதால் நன்மைக்கு பதிலாக தீமை தான் அதிகமாக வரும். அதுவும் குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் PCOS, PCOD பிரச்சினைகளுக்கு இதுவே காரணம்.
எனவே நீங்கள் குடிக்கும் பால் உண்மையில் தூய்மையானதா என்பதை சரி பார்க்கவும். முக்கியமாக பாக்கெட் பாலுக்கு பதிலாக பண்ணையில் விற்கப்படும் பசும் பாலை வாங்கி குடியுங்கள் அதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ரொமகுடியுங்கள்..