ஒரு போட்டியில் பல சாதனைகள் படைத்த சஞ்சு சாம்சன்
9 கார்த்திகை 2024 சனி 08:52 | பார்வைகள் : 456
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளைப் படைத்தார்.
டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 சதங்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த சதம் மூலம் சஞ்சு சாம்சன் (Sanju Samson) பல சாதனைகளை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் (ஆடவர்) அடுத்தடுத்து சதம் விளாசிய 4வது வீரர் சஞ்சு சாம்சன்.
அதிவேகமாக டி20யில் 7000 ஓட்டங்களை கடந்த ராபின் உத்தப்பாவின் சாதனையை சாம்சன் சமன் செய்தார்.
இந்த மைல்கல்லை எட்டிய 7வது வீரர் சாம்சன்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆடவர் டி20 போட்டிகளில் 4வது அதிக ஸ்கோர் எட்டிய வீரர் சாம்சன் (107) ஆவார்.
அவருக்கு முன் பாபர் அசாம் (122), ஜான்சன் சார்லஸ் (118) மற்றும் கெய்ல் (117) உள்ளனர்.
சஞ்சு சாம்சன் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆடவருக்கான டி20யில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் (10) சாதனையையும் சாம்சன் சமன் செய்துள்ளார்.