5 ஸ்டார் ரேட்டிங்குடன் வரும் மாருதி சுஸுகியின் புதிய Dzire
9 கார்த்திகை 2024 சனி 08:55 | பார்வைகள் : 273
மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தும் புதிய Dzire கார், Global NCAP crash test-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
கிராஷ் டெஸ்ட் முடிவுகளை நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்டது.
GNCAP படி, டிசையர் பெரியவர்களுக்கு 34-க்கு 31.24 மதிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு 49-க்கு 39.20 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
எந்தவொரு கிராஷ் டெஸ்ட் ஏஜென்சியிடமிருந்தும் பெரியவர்களுக்கு 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்புக்காக 4 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்ற மாருதியின் முதல் கார் இதுவாகும்.
முன்னதாக, மாருதியின் Brezza மிக உயர்ந்த 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. அதே நேரத்தில், மூன்றாம் தலைமுறை Dzire விபத்து சோதனையில் 2 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்றது.
மாருதி சுஸுகி ப்ராண்டில் அதிகம் விற்பனையாகும் செடான் கார் டிசையர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், Maruti Suzuki Dzire நான்காம் தலைமுறை மாடலை நவம்பர் 11-ஆம் திகதி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
நான்காம் தலைமுறை மாருதி சுஸுகி டிசையர், ஹேட்ச்பேக் மாடலான Swift-ன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அதன் வடிவமைப்பு முற்றிலும் வேறுபட்டது.
இந்த கார் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் பல செக்மென்ட் ஃபர்ஸ்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய Maruti Suzuki Dzire LXI, VXI, VXI(O), ZXI மற்றும் ZXI+ ஆகிய 5 வகைகளில் வெளியாகிறது.
இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .6.99 லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள, டிசைரின் விலை ரூ .6.57 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
Maruti Suzuki Dzire செடான் பிரிவில் Honda Amaze, Hyundai Aura மற்றும் Tata Tigor போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
இந்த காரின் CNG வகை கிலோவுக்கு 33.73 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.