Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 6)
8 ஆடி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18273
ஜூலை 1 ஆம் திகதி காலை சிறையில் இருந்து தப்பித்துக்கொள்கின்றான் Faïd.
இது எப்படி சாத்தியமானது என விசாரணைகள் முடக்கப்பட்டன. இரண்டாவது தடவை கோட்டை விட்டுள்ளார்கள் என சர்ச்சை மேல் சர்ச்சை எழுந்தது.
தேடுதல் வேட்டையும் அப்போதே ஆரம்பித்தது. அவன் தப்பிச் சென்ற உலங்கு வானூர்தியை தேடினார்கள். மறுநாள் அது சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனியாருக்குச் சொந்தமான உலங்குவானூர்தியை ஆயுத முனையில் கடத்திக்கொண்டு வந்து இந்த 'மீட்பு' பணியை மேற்கொண்டிருந்தார்கள்.
உலங்குவானூர்தியை சாள்-து-கோல் அருகே நிறுத்திவிட்டு, அங்கிருந்து கறுப்பு நிற மகிழுந்து ஒன்றில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.
அந்த கறுப்பு நிற மகிழுந்தை தேடும் பணி முடுக்கப்பட்டது.
இதற்கிடையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக அவனுக்கு ஐரோப்பிய ரீதியிலான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எல்லைகளிலும் தேடுதல் வேட்டையும், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
கறுப்பு நிற மகிழுந்து சிக்கியதா.. தொடர்ந்தும் தேடப்பட்டு வந்த நிலையில், ஓரிரு நாட்களிலேயே அந்த மகிழுந்து கிடைத்தது.
குறித்த மகிழுந்து எரியூட்டப்பட்டு சாம்பல் மேடாக கிடந்த நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
Faïd கிடைத்தானா?? இல்லவே இல்லை.. அவனையும் காணவில்லை.. அவன் குறித்த தகவலும் கிடைக்கவில்லை. கிணற்றில் போட்ட கல் போன்று இந்த வழக்கு முடிவுக்கு வந்தது...
(நாளை..)