Paristamil Navigation Paristamil advert login

வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொடருந்து ஊழியர்கள்!

வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொடருந்து ஊழியர்கள்!

9 கார்த்திகை 2024 சனி 16:25 | பார்வைகள் : 7710


தொடருந்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த வேலை நிறுத்தம், அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானது. CGT-Cheminots, Unsa-Ferroviaire, Sud-Rail மற்றும் CFDT-Cheminots உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளன.

”Fret SNCF” எனும் ஐந்து நிறுவனங்கள் இணைந்த தொடருந்து நிறுவன குழுமம், எதிவரும் ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் இரு தனித்தனி நிறுவனங்களாக பிரிய உள்ளது. இதனைக் கண்டித்தே இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்