அடையாளம் தெரியாத பொருளை உட்கொண்ட இருவர் உயிருக்கு போராட்டம்...!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 8444
அடையாளம் தெரியாத பொருளை உட்கொண்ட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராட்டமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. Avenue de la Porte-de-Ménilmontant வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 21 தொடக்கம் 27 வயதுடைய மூவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களது தோழி ஒருவரே காவல்துறையினரை அழைத்துள்ளார்.
சுயநினைவற்றுக்கிடந்த மூவரையும் காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் அடையாளம் தெரியாத ஒன்றை உகொண்டதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

























Bons Plans
Annuaire
Scan