Paristamil Navigation Paristamil advert login

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 4)

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 4)

4 ஆடி 2019 வியாழன் 12:30 | பார்வைகள் : 4485


ஐரோப்பிய ரீதியிலான பிடியாணை Rédoine Faïd க்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது. எங்கிருந்தாலும் கைது செய்யும் படி அனைத்து நாட்டு உள்துறை அமைச்சகத்திடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. 
 
ஏப்ரல் 13, 2013 ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பியவன், அடுத்த மாதமே சிக்கினான். 
 
29 ஆம் திகதி,  மே மாதம் 2013 ஆம் ஆண்டு அவன் Pontault-Combault, (Seine-et-Marne) இல் உள்ள  B&B உணவகத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இரவோடு இரவாக சுற்றி வளைத்து அவனை கைது செய்தனர் காவக்துறையினர்.
 
சிறையில் இருந்து தப்பித்தவுடன் அவன் இஸ்ரேலுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தான். ஆனால் ஐரோப்பிய ரீதியிலான பிடியாணை அதை முடக்கியது. தவிர அவனிடம் போதிய ஆவணங்களும் இருந்திருக்கவில்லை. 
 
மே 29, ஆம் திகதி கைது செய்யப்பட்டு, Seine-et-Marne இல் உள்ள Réau சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் கீழ் சிறைவைக்கப்பட்டான். 
 
இத்தோடு அவனது கதை முடிவுக்கு வந்தது என நினைத்திருந்த வேளையில், அவன் மீண்டும் சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டினான். 
 
இம்முறை எவ்வித சொதப்பல்களும் வந்துவிடக்கூடாது. தப்பித்து ஒரேயடியாக தலைமறைவாகிவிடவேண்டும் என எண்ணியிருந்தான். 
 
அமெரிக்க திரைப்படங்கள்..!!
 
அடிப்படையில் Rédoine Faïd இற்கு தாம் பெரிய கொள்ளையனாக வரவேண்டும்.. நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என சிந்தனைகள் மிக குறைவு. அமெரிக்க திரைப்படங்களை பார்த்து <<ராபின் ஹூட்>> மாதிரியான கதாப்பாத்திரங்களில் ஈர்த்து தன்னையும் ஒரு 'ஹீரோ'வாக எண்ணியுள்ளான் என அவனது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 
 
முன்னர் வெடிகுண்டு வைத்து தகர்த்து சிறையில் இருந்து தப்பித்தான் இல்லையா? தற்போது, அதை விட ஒரு 'மாஸ்' சீன் ஒன்றை திட்டமிட்டான்..
 
(நாளை..)

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்