Paristamil Navigation Paristamil advert login

அதிகளவான தாய்ப்பால் தானம் செய்த பெண்ணின் உலக கின்னஸ் சாதனை 

அதிகளவான தாய்ப்பால் தானம் செய்த பெண்ணின் உலக கின்னஸ் சாதனை 

10 கார்த்திகை 2024 ஞாயிறு 13:43 | பார்வைகள் : 419


அண்மைக்காலங்களாக பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ(Alyssa Ogletree) தனது சொந்த சாதனையை முறியடித்து, அதிக அளவு தாய்ப்பால் தானம் செய்த பெண்மணி என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

36 வயதான அலிசா ஓக்லெட்ரீ ஆச்சரியமூட்டும் விதமாக 2,645.58 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார்.

இது 2014 இல் அவர் படைத்த 1,569.79 லிட்டர் என்ற முந்தைய சாதனையை தாண்டியுள்ளது.

அலிசா ஓக்லெட்ரீயாவின் இந்த அசாதாரண சாதனை கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.

நார்த் டெக்சாஸின் தாய்ப்பால் வங்கியின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் தாய்ப்பால் 11 முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு போதுமானது.

இதன் அடிப்படையில், ஓக்லெட்ரீ வழங்கிய தாய்ப்பால் தானம் 350,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அலிசா ஓக்லெட்ரீயின் பயணம் 2010ம் ஆண்டு அவரது மகன் கைல் பிறந்தபோது தொடங்கியுள்ளது.

அலிசா ஓக்லெட்ரீக்கு அதிக அளவு பால் சுரக்கும் தன்மை இருப்பதை கண்டறிந்த பிறகு, அவரை தாய்ப்பால் தானம் செய்யுமாறு அப்போது செவிலியர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்டு தாய்ப்பால் தானம் செய்ய தொடங்கிய அலிசா ஓக்லெட்ரீ உலக சாதனை படைத்து இருப்பதுடன் மற்றவர்களையும் தாய்ப்பால் தானம் செய்யுமாறு ஊக்குவிக்க விரும்புகிறார்.

அலிசா ஓக்லெட்ரீயின் அதிகப்படியான பால் சுரப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து தாய்ப்பால் தானத்தை செய்து வருகிறார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்