Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 3)
3 ஆடி 2019 புதன் 11:30 | பார்வைகள் : 2526
'பரோல்' கண்டிஷன்களை Faïd மீற ஆரம்பித்தான். சிறு சிறு 'வெளியில் தெரியாத' கொள்ளைகள் என மீண்டும் களத்தில் இறங்கினான்.
இதனால் மீண்டும் Faïd கைது செய்யப்பட்டு, எட்டுவருட சிறைத்தண்டனையோடு 2011 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Sequedin சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த Faïd, அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டினான்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி அந்த நாள் வந்தது. சிறைச்சாலையின் கதவுகளை வெடிகுண்டு வைத்து தகர்த்து, அங்கிருந்த ஐந்து அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தான். யாருமே எதிர்பாராத நிகழ்வு அது. வெடிகுண்டு வைத்து தகர்த்து தப்பிப்பது மிகப்பெரும் ஹீரோயிசம். அவனது சிந்தனைகள் அப்படி இருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மகிழுந்து ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து Lille நகருக்குச் சென்றான். அங்குவைத்து அந்த மகிழுந்தை எரித்து விட்டு, பிறிதொரு மகிழுந்தில் ஏறி தப்பிச் சென்றான்.
அன்றைய நாளிலேயே அவனை கைது செய்ய ஐரோப்பிய ரீதியிலான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தேடுதல் வேட்டை துரித வேகத்தில் ஆரம்பித்தது.
தேடுதல் வேட்டையில் அவன் அடுத்த மாதத்திலேயே கைதானான். சம்பவங்கள் இன்னும் பெரிதாக காத்திருந்தன...
(நாளை)