1000 கி.மீ., சென்று தாக்கும் ஏவுகணை: விரைவில் இந்தியா சோதனை
11 கார்த்திகை 2024 திங்கள் 03:50 | பார்வைகள் : 349
ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போர்க்கப்பல்கள் அல்லது விமானம் தாங்கி கப்பல்களை தாக்கக்கூடிய திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா விரைவில் சோதனை செய்ய உள்ளது.
இது குறித்து டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
இன்னும் சில நாட்களில், 1000 கி.மீ., தொலைவில் உள்ள போர்க்கப்பல்கள் அல்லது விமானம் தாங்கி கப்பல்களை தாக்கக்கூடிய வகையில் , பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்ய இருக்கிறோம்.
வெற்றிகரமான சோதனைக்கு பின், இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, வழங்கப்படும்.
இந்த பாலிஸ்டிக் ஏவுகணையானது போர்க்கப்பல்கள் மற்றும் கரை சார்ந்த இடங்களில் இருந்து ஏவக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.