Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 2)
2 ஆடி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 2305
அல்ஜீரியாவில் இருந்து பிரான்சுக்கு அகதிகளாக வந்த பெற்றோருக்கு 1972 ஆம் ஆண்டு பிறந்தவன் தான் Faïd. அவனது கதை அங்கேயே ஆரம்பிக்கின்றது.
Creil நகரிலேயே தனது பால்யத்தை கழித்த அவனின் நடத்தைகளில் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தன. ஆவணங்களின் படி, 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் Jean-Claude Bisel என்பவனோடு சேர்ந்து, முதல் கொள்ளையை அரங்கேற்றுகின்றான் Faïd.
ஆயுத முனையில் கொள்ளை, சிறு கடைகளுக்குள் நுழைவது.. ஆயுதத்தை காண்பித்து பணம் பறிப்பது.. வீடுகளுக்குள் நுழைந்து நகைகளை திருடுவது என இந்த குற்றங்கள் நீள்கின்றன.
இது தொடர்பாக விசாரணைகளை காவல்துறை ஆரம்பித்தது. Faïd என்பவனை முதன் முதலாக காவல்துறை அடையாளம் கண்டதோடு, அவனோடு மேலும் எட்டு பேர் குழுவில் உள்ளனர் என தெரிவித்தது.
பின்னர் ஏனைய எட்டுப்பேரும் அல்ஜீரியாவுக்கு தப்பிச் செல்ல, Faïd சுவிட்சர்லாந்தில் தலைமறைவானான். நடுவில் சில மாதங்கள் இஸ்ரேல்லும் தங்கியிருந்தான். அப்போது அவன் ஹீப்ரூ மொழியினையும் கற்றிருந்தான். மூன்று வருடங்கள் மறைந்து வாழ்க்கை நடத்திய அவனை 1998 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவனுக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. 10 ஆவது வருடம் 2008 ஆம் ஆண்டு பரோலில் விடுதலையானான்.
2009 ஆம் ஆண்டு Braqueur - Des cités au grand banditisme எனும் (கொள்ளையன் - திட்டமிடப்பட்ட கொள்ளைகள்) புத்தகத்தை எழுதினான். (என்ன கொடுமை சார் இது...)
ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? பரிசுக்குள் மீண்டும் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்ற தொடங்கினான்.
(நாளை)