Rédoine Faïd - மாயாவி..!!
1 ஆடி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 7409
இன்றைய திகதியில் இந்த நாட்டில் யாருக்கு மிக பாதுகாப்பு அதிகம் என்கின்றீர்கள்..??? ஜனாதிபதிக்கா... அட இல்லப்பா... Rédoine Faïd எனும் சிறைக்கைதிக்கு...!!
அட, உண்மைதான். சிறையில் இருக்கும் அவன் தான் தற்போது மிகப்பெரும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுக்ளான். காரணம் அவன் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதால்.
Rédoine Faïd ஒரு கேங்ஸ்ட்டர்..!!
ஆயுத முனையில் கொள்ளையடிப்பது, சட்டவிரோத ஆயுதம் கடத்துவது, வைத்திருப்பது, வங்கிகளை சூறையாடுவது, சிறையில் இருந்து தப்பிப்பது என இவன் மேல் உள்ள வழங்குகள் பட்டியல் ஒரு தொடர்கதை..
1972 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி Creil, நகரில் பிறந்த இவனுக்கு தற்போது 47 வயது.
இன்றில் இருந்து சரியாக ஒருவருடத்துக்கு முன்னர், அதாவது ஜூலை 1, 2018 ஆம் ஆண்டு.. Seine-et-Marne இல் உள்ள Réau சிறையில் இருந்து தப்பித்துவிட்டான். அதுவும் எப்படி, சினிமாவில் வருவது போல், ஹெலிகாப்டர் எல்லாம் வரவழைத்து, அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்து தப்பித்துள்ளான்.
சிறையில் இருந்து தப்பித்து 90 நாட்களின் பின்னர் அவன் மீண்டும் கைது செய்யப்பட்டான்.
அதன் பின்னரே தற்போது மிகுந்த கண்காணிப்புடன், கண்களில் எண்ணை ஊற்றி கவனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இருக்காதா பின்னே.. அவன் தப்பிச் சென்றது அது இரண்டாம் முறை. மீண்டும் தப்பிச் செல்லலாம் என அஞ்சி இந்த உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(மேலதிக தகவல்கள் நாளை...)






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan