Paristamil Navigation Paristamil advert login

Pantin - தெரிந்த நகரம் - தெரியாத தகவல்கள்!!

Pantin - தெரிந்த நகரம் - தெரியாத தகவல்கள்!!

27 ஆனி 2019 வியாழன் 12:30 | பார்வைகள் : 18135


Pantin நகரம் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரியாத சில தகவல்களை அறிந்துகொள்ளலாம்....!!
 
ஐரோப்பாவில் இருக்கும் 'மிக நெருக்கடியான' நகரங்களில் Pantin உம் ஒன்று. 
 
ஒரு சதுர கிலோமீற்றருக்கு 11,000 பேர் படி வசிக்கின்றனர். நீங்கள் இங்கு வசிப்பவர் என்றால் தெரிந்தே இருக்கும்... அட ஆமாப்பா.. எங்கு பார்த்தாலும் ஒரு மக்கள் வெள்ளமப்பா.. ஒழுங்கான பார்கிங் கூட கிடைப்பதில்லை என நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது. 
 
Pantin நகரம் மொத்தமாகவே 5.1 சதுர கிலோமீற்றர் பரப்பரளவை கொண்டது தான்.. இதில் மொத்தமாக 55,000 பேர் வசிக்கின்றனர். 
மத்திய பரிசில் இருந்து 6.4 கி.மீ தூரத்தில் ஆரம்பிக்கின்றது Pantin. அதாவது பரிசில் இருந்து தடுக்கிவிழுந்தால் Pantin வந்துவிடும். 
 
ஆனால் உண்மையில் Pantin இப்போதிருப்பதை விட பெரிய நகரம். ஜனவரி 1, 1860 ஆம் ஆண்டு பரிசின் விரிவாக்கல் நகரமமைத்தல் காரணமாக Pantin இல்  இருக்கும் சில பகுதிகளை பரிசோடு இணைத்துக்கொண்டார்கள். 
 
Pantin எனும் பெயர் எப்படி வந்தது தெரியுமா?? Pentini எனுன் ரோமல் பெயரில் இருந்து மருவி Pantin ஆனது. 
கிரேக்க தத்துவவியலாளர் Pantaenus இன் பெயரை இந்த நகருக்கு வைத்து, பின்னாளில் Pantin ஆனது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்