ஐரோப்பிய நாடுகளின் மீது ரஷ்யா படையெடுக்கும் வாய்ப்பு - நிபுணர்கள் கணிப்பு
12 கார்த்திகை 2024 செவ்வாய் 11:27 | பார்வைகள் : 1740
உக்ரைன் மீது ரஷ்யா பல மாதங்களாக போரை நீடித்து வருகின்றது.
உக்ரைனுடன் போரை முடித்துக்கொண்டதன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு ஐரோப்பிய நாடுகளின் மீது படையெடுப்பு நடத்த கூடும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
விளாடிமிர் புடின் ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் உயரிய லட்சியங்களைக் கொண்டுள்ளார் என நம்புவதாக உள்விவகாரம் மற்றும் பாதுகாப்பு நிபுணர் நிக்கோலஸ் டிரம்மண்ட் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த லட்சியமானது ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் மீதான வெற்றியை பதிவு செய்ததன் பின்னர் அவரது அடுத்த இலக்கை நோக்கி நகர்வார் என்றும் டிரம்மண்ட் தெரிவித்துள்ளார்.
பால்டிக் நாடுகளான, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா, ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டுள்ளன. இந்த நாடுகள் இன்னொரு முறை ரஷ்ய தாக்குதலுக்கு இலக்காகலாம்.
மால்டோவா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கூட மீண்டும் ரஷ்யாவின் இலக்காக மாறும் அபாயம் உள்ளது. டிரம்மண்ட் மேலும் தெரிவிக்கையில், புடின் ஒரு ஆபத்தான நபர், மிகவும் ஆபத்தான நபர், ரஷ்யா மீண்டும் வல்லரசாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்றார்.
பால்டிக் நாடுகள் மீது அவர் பார்வை திரும்பும் என்பது உறுதியாகியுள்ளது. பால்டிக் நாடுகளில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ரஷ்யா நேட்டோ நாடுகளில் ஒன்றை தாக்கினாலும், அது நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படும்.
இது மிகப்பெரிய சிக்கலாக உருவெடுக்கும். முதலில் அவர் மால்டோவா மீது படையெடுக்கலாம். ஆப்பிரிக்காவிலும் சில பகுதிகளை அவர் குறி வைத்திருக்கலாம். இதனிடையே, டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சி செய்யலாம் என்று மால்டோவன் அரசியல்வாதிகள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, மால்டோவாவை குறிவைத்து ஏற்கனவே ரஷ்யா அழுத்தம் அளித்து வருகிறது. இதனிடையே, நேட்டோ உறுப்பு நாடுகளிடம் ஏற்கனவே பால்டிக் நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளன. ரஷ்யா மீதான அச்சத்தால் குடிமக்களுக்கும் போர் பயிர்சி அளிக்க பால்டிக் நாடுகள் திட்டமிட்டு வருகிறது.