Villejuif : பெயர்க் காரணம்!!
14 ஆனி 2019 வெள்ளி 11:30 | பார்வைகள் : 3051
முந்தைய பிரெஞ்சு புதினத்தில் Villejuif குறித்து பல தகவல்கள் அறிந்துகொண்டீர்கள். சரி, இந்த 'Villejuif' எனும் பெயர் ஏன் வந்தது??!!
1119 ஆம் ஆண்டு இந்த நகரத்துக்கு Villa Judea என ஒரு பெயர் இருந்தது. இதற்கு லத்தீன் மொழியில் 'யூத குடியேற்றம்' என அர்த்தம்.
ஆம், இங்கு அதிகளவான யூதர்கள் முன்னதாக வசித்தனர். கிட்டத்தட்ட யூதர்களுக்காக 'ஒதுக்கி' வைக்கப்பட்ட இடமாக இது கருதப்பட்டது.
பரிசுக்குள் பிரெஞ்சு மக்கள் வசிக்கும் போது, புறநகரில் யூதர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது பிந்நாளில் பெரும் வன்முறைக்கு வித்திட்டது. அது குறித்து பின்னர் ஒரு நாள் பார்க்கலாம்.
Villa Judea எனும் பெயர், நாளடைவில் இந்த பெயர் Villejuifve என மாறியது. அப்போதும் அதன் அர்த்தம் மாறாமல் இருந்தது.
பின்னர், யூதர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர், பிரெஞ்சு எழுத்தாளர் Louis Moréri, <<இன்னுமா இது யூதர்கள் குடியேற்றமாக உள்ளது.?!>> என சுட்டிக்காட்டினார்.
ஆனால் யூதர்கள் அங்கு வசிக்கவில்லை என்றபோதும், பெயரை மாற்றுவது குறித்து எவரும் சிந்திக்கவில்லை.
20 ஆம் நூற்றாண்டிலும் இந்த பெயரில் மாற்றம் குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. ஆனாலும் பெயரினை தக்கவைத்துக்கொண்டது.
பெயரில் சின்ன சின்ன மாற்றங்கள் மருவி வந்தாலும், <<யூதர்கள் குடியேற்றம்>> எனும் அர்த்தம் மட்டும் மாறவில்லை.