பிரான்சில் - கிட்டத்தட்ட இரண்டில் ஒரு திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிகிறது! - காரணம் என்ன..?!!
13 கார்த்திகை 2024 புதன் 10:02 | பார்வைகள் : 2666
கிட்டத்தட்ட இரண்டில் ஒரு திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்குரிய பிரதான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில், 44% சதவீதமான திருமண வாழ்க்கை மணமுறிவில் முடிவதாக தெரிவிக்கப்படுகிறது. 75% சதவீதமான விவாகரத்தை பெண்களே முன்னெடுக்கின்றனர். குடும்ப வன்முறை, உடலுறவில் திருப்தி இன்மை, பொருளாதாரம், நம்பிக்கையின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த விவாகரத்து இடம்பெறுவதாகவும், பிரதானமாக 60% சதவீதமான திருமண முறிவுக்கு காரணம் ‘நெருக்கமான வாழ்க்கை’ இல்லை என்பதே ஆகும்.
41 சதவீதமான திருமண முறிவுகள் ‘குடும்ப நிர்வாகத் திறன்’ இல்லாமையாலும், 26% சதவீதமான முறிவுகள் பொருளாதார நெருக்கடியினாலும் இடம்பெறுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பிரான்சில் பெரும்பாலும் பெண்கள் 44 வயதிலும், ஆண்கள் 42 வயதிலும் விவாகரத்துக்குக்கு உட்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.