Paristamil Navigation Paristamil advert login

கிரிமியாவில் கார் குண்டு வெடிப்பு - ரஷ்ய ராணுவர் வீரர் மரணம்..

கிரிமியாவில் கார் குண்டு வெடிப்பு - ரஷ்ய ராணுவர் வீரர் மரணம்..

13 கார்த்திகை 2024 புதன் 12:27 | பார்வைகள் : 3768


ரஷ்யாவின் இணைக்கப்பட்ட கிரிமியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிமினாவின் துறைமுக நகரமான Sevastopolயில் அதிகாலை வேளையில் கார் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.

கிரெம்ளினில் நிறுவப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பலியான நபரை அடையாளம் கண்டனர். அவர் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் என்று பின்னர் தெரிய வந்தது.  

அவர் நாசவேலை சதியில் இலக்காகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து Sevastopol ஆளுநர் Mikhail Razvozhayev கூறுகையில்,

"காருக்குள் ஒரு சாரதி இருந்தார், அவர் விரைவாக வெளியேற்றப்பட்டு மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் காயங்களால் இறந்தார். அந்நபர் ரஷ்ய ராணுவ வீரர். கார் வெடிப்புக்கான காரணத்தை புலனாய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை. ஆனால், நாசவேலையை நிராகரிக்க முடியாது என்பது தெளிவாகிறது" என தெரிவித்துள்ளார்.          

வர்த்தக‌ விளம்பரங்கள்