Paristamil Navigation Paristamil advert login

Villejuif : ஒரு அறிமுகம்!!

Villejuif : ஒரு அறிமுகம்!!

12 ஆனி 2019 புதன் 12:30 | பார்வைகள் : 2937


Villejuif இந்த நகரத்துக்கு அறிமுகம் உங்களுக்கு தேவையே இருக்காது. பரிசில் இருந்து தடுக்கி விழுந்தால் இந்த நகரத்துக்கு வந்துவிடலாம். பரிசின் புறநகரான Villejuif குறித்து இன்றைய பிரெஞ்சு புதினம். 
 
பரிசின் மத்தியில் இருந்தே சரியாக 7 கி.மீ தூரத்தில் உள்ளது Villejuif. 
 
மொத்தமாக 5.34 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பை கொண்ட நகரம் இது. 
Val-de-Marne மாவட்டத்துக்கு வருமானத்தை அதிகளவில் கொண்டுசேர்க்கும் நகரங்களில் முக்கியமானது இந்த நகரம். 
 
ஒரு சதுர கிலோமீற்றருக்கு 10,000 ஏர் எனும் கணக்கில் 60,000 க்கும் குறைவான மக்கள் இங்கு வசிக்கின்றன. 
 
இங்குள்ள மூன்று மெற்றோ நிலையங்களலும், மிக 'பிஸி'யான நிலையங்கள் தான். 
Léo Lagrange/ Paul Vaillant-Couturier, மற்றும் Louis Aragon ஆகிய மூன்று நிலையங்களே அவை. 
 
இங்கு 13 முன்பள்ளிகள், 11 ஆரம்பப்பாடசாலைகள், ஐந்து உயர்கல்வி பாடசாலைகளும் உள்ளன. 
 
சுற்றுலாபயணிகளை கவரும் பெருமளவிலாக பகுதிகள் இங்கு சற்று குறைவு என்றபோதும், உணவகங்கள், தங்குமிடங்களுக்கு பஞ்சமேதுமில்லை.
 
அதெல்லாம் சரி, Villejuif எனும் பெயர் எப்படி வந்தது? நாளை பார்க்கலாம்...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்