சீனாவில் அதிவேகமாக மக்கள் மீது மோதிய கார் - 35 பேர் உடல்நசுங்கி பலி
13 கார்த்திகை 2024 புதன் 14:53 | பார்வைகள் : 1086
சீனாவின் ஜுஹாய் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
35 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்தாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
62 வயதான ஆண் ஓட்டுநர் SUV வாகனத்தை தடையின் வழியாக ஜுஹாய் ஸ்போர்ட்ஸ் சென்டருக்குள் ஓட்டிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
காயமடைந்தவர்களில் பல முதியவர்கள், பதின்மவயதினர் மற்றும் குழந்தைகள் உள்ளடங்குவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
மேலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதன் விளைவாக தற்போது கோமா நிலையில் உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரு பெரிய சிவில் மற்றும் இராணுவ விமான கண்காட்சியை நடத்தும் நகரில் பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.