‘தளபதி 69’ விஜயின் கடைசி படமா?
13 கார்த்திகை 2024 புதன் 15:00 | பார்வைகள் : 8831
நடிகர் விஜயின் கடைசி படம் குறித்து முன்னணி நடிகரான சிவராஜ்குமார் பகிர்ந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர். சினிமாவில் உச்சம் தொட்ட இந்த நடிகர் தற்போது அரசியல் களத்திலும் கால் பதித்துள்ளார். 2026ம் ஆண்டு தேர்தலை இலக்காக வைத்து தனது கட்சியை தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் நடத்திய பிரம்மாண்ட மாநாடு மிகப்பெரிய பேசுபொருளானது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் சக்கைப்போடு போட்டு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 69’. இதுவே சினிமாவில் விஜய் கடைசியாக நடிக்கும் படம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இது விஜயின் கடைசி படமாக இருக்காது என்று முக்கிய நடிகர் ஒருவர் அப்டேட் கொடுத்துள்ளார். அவர், ‘ஜெயிலர்’ படம் மூலமாக தமிழக ரசிகர்களை கவர்ந்த சிவராஜ்குமார் தான்.
‘தளபதி 69’ படத்தில் நடிக்கவுள்ளது குறித்து பேசிய சிவராஜ்குமார், ‘‘தளபதி 69’ படத்தின் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு தன்னை அணுகியதாகவும், தனது கால்ஷீட்டை வைத்துதான் அதில் நடிப்பேனா என்பது தெரியவரும்’ என்றார்.
அதேநேரத்தில், விஜயின் கடைசி படமா என்ற கேள்விக்கு, ‘தன்னைப் பொறுத்தவரை இது விஜயின் கடைசி படமாக இருக்காது’ என்றும் கூறினார்.

























Bons Plans
Annuaire
Scan